பெர்னாட்ஷா - 1
செஸ்டர்டன் என்ற எழுத்தாளர் ஒருமுறை பெர்னாட்ஷாவை சந்திக்க வந்திருந்தார்.
செஸ்டர்டன் என்ற எழுத்தாளர் ஒருமுறை பெர்னாட்ஷாவை சந்திக்க வந்திருந்தார்.
ஷா மிகவும் ஒல்லியாக இருந்தார். செஸ்டர்டன் மிகவும் உடல் பருத்து குண்டாக இருந்தார். செஸ்டர்டன் பெர்னாட்ஷாவைப் பார்த்து "உங்களைப் பார்த்தால் இந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல் இருக்கிறது" என்று கிண்டலாக சொன்னார்.
ஷா அதற்கு அமைதியாக "நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் உங்களைப் பார்த்தால் "பஞ்சத்திற்குக் காரணமே நீங்கள்தான் என்று புரிந்து கொள்வார்கள்"என்றார் .
செஸ்டர்டன் அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லை... :)
பெர்னாட்ஷா -2
பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர் 'பெர்னாட்ஷா; திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?'என்று கேட்டார்.
பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர் 'பெர்னாட்ஷா; திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?'என்று கேட்டார்.
அதற்குப் பெர்னாட்ஷா... "கடவுளுக்கு நன்றி சொல்வேன்"என்றார்.
குழப்பமடைந்த நண்பர் "கடவுளுக்கு நன்றியா ஏன்? என்று கேட்டார்.
"பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா ? அதனால்தான்"என்றார் ஷா அமைதியாக.
No comments:
Post a Comment