VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Sunday, January 29, 2012

"கால் சிலம்பை கழட்ட வேண்டியதில்லை."

நதி போல் விளையாட்டாய் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென வந்த ஒரு திருப்பத்தில் உணர்ந்தேன் வளைவும் நெளிவும் கடைசியாக முடிந்த வடிவம் கேள்விக்குறி என்பதை மட்டும்..
பட்டுப்புழுவின் மரணம் பட்டாம்பூச்சி போல..

வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி மாதிரி.கொஞ்ச காலம் தான் வாழ முடியும். அதே மாதிரி ஒரு  பட்டாம்பூச்சி சுதந்திரமா பறக்கும்வரை தான் தன் சந்தோஷ காற்றை சுவாசிக்கலாம் என்பதையும் தெரிஞ்சுகொள்ள  வேண்டும் .

சுய கௌரவம் ,அதிகாரம்,பதவி,பொய், போட்டி,பொறாமை இப்படி பல உயிரற்ற விஷயங்களுக்காக உயிருள்ள நம் சக மனிதர்களை பாடாய்படுத்துகிறோம். கொலை செய்றது மட்டும் தப்பு  இல்ல. நம்ம சுயநலத்திற்காக, நம்ம சந்தோசத்துக்காக இன்னொருத்தரை பற்றி  தப்பா சொல்றது தப்புதானே? சக ஊழியர்களை,சக நண்பர்களை,உறவினர்களை பற்றி  அவர்கள்  இல்லாதபோது தப்பா பேசுறதும் ,நம்பிக்கை துரோகம் பண்றதும் கூட கெட்டது தானே?

"கால் சிலம்பை  கழட்ட வேண்டியதில்லை எந்த நீதிக்காகவும்...."

கதை :
ஒரு சாதுவை சோதிக்க நினைத்த ஒரு மனிதன் பட்டாம்பூச்சியை கையில் வைத்து கொண்டு அவரிடம் ,என் கையில் என்ன உள்ளது என்று கேட்டான் .. அதற்கு அவர் சரியாக பட்டாம்பூச்சி என்று சொல்லிவிட்டார்.

உடனே  அவன் சாதுர்யமாக பட்டாம்பூச்சி எப்படி இருக்கிறது? என்று கேட்டான்.ஒரு வேளை அவர் உயிரோடு உள்ளது  என்று சொன்னால் அதனை  நசுக்கி இறந்து விட்டது என்று சொல்லலாம் என்றும்
இதுவே இறந்து விட்டது என்று சொன்னால் பறக்க விடலாம் என்றும் எண்ணினான் ..
அதற்கு அந்த சாதுவோ "அது உன் கையில் இருக்கிறது" என்று சொன்னார்
அது போல தான் நம் வாழ்க்கையும் .....அது பறப்பதும் இறப்பதும் நம் கையில் தான்  உள்ளது .