VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Monday, December 26, 2011

சனிப் பெயர்ச்சி பலன் 2011 - 2014

கர வருடம் , மார்கழி  மாதம் , 5ஆம் திகதி  புதன்கிழமை  (21.12.2011)   நாளில் சரியாக காலை 6:55 மணிக்கு கன்னி  ராசியில்  இருந்து  தன்னுடைய  உச்ச       வீ டான துலாம்  ராசிக்குள்  நுழையும்  சனி பகவான்  ஏறகுறைய  16.12.2014 வரை , துலாம்  ராசியிலேயே அமர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.

ரிஷபம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி திடீர் யோகங்களையும்  திடீர் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும்.

மிதுனம், கன்னி, துலாம், மகரம், மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு மத்திம பலன்கள் உண்டாகும். 

மேஷம், கடகம், விருச்சிகம், மற்றும் மீன
ராசிக்காரர்களுக்கு காரியத் தடைகள் , சிறு சிறு பாதிப்புகள் வந்து நீங்கும்.

சனிப்  பெயர்ச்சி பலன்களை பார்க்க பின்வரும் link ஐ click செய்யவும்..

http://www.tubetamil.com/view_video.php?viewkey=e7e254e5e76c8b7317ac&page=&viewtype=&category=


தொடரும்...Friday, August 26, 2011

வாழத் தெரியாதவள்

என்னைப் பற்றிப் பேசினேன்,
சுயபுராணம் என்றனர்...

மற்றவர்களைப் பற்றிப் பேசினேன்,
பொறாமை என்றனர்...

சமூகத்தைப் பற்றிப் பேசினேன்,
பிழைக்கத் தெரியாதவள் என்றனர்...

சிரித்துப் பேசினேன், சூழ்ச்சிக்காரி என்றனர்..
சிரிக்காமல் பேசினேன், நயவஞ்சகி என்றனர்..

அமைதி காத்தேன், உம்மனாமூஞ்சி என்றனர்..
மௌனமானேன், 
வாழத் தெரியாதவள் என்றனர்....

Thursday, August 25, 2011

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?


அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள். திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும்  பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள். கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

Wednesday, February 02, 2011

நம்ம வீட்டு கல்யாணம்

  சிலந்தி  அகடமி வழங்கும் நம்ம வீட்டு கல்யாணம்

இன்னிக்கு நம்ம வீட்டு  கல்யாணம் நிகழ்ச்சில இரு மனங்கள் இணைந்து மகிழ்ந்த  திருமணம் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்  திருவாளர் திருமதி அவர்கள் ... வாங்க இவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்/ திருவாளர் : எங்களோட கல்யாணம் ஒரு காதல் கல்யாணம் ... ஒரு திருட்டு மாங்கா பறிக்கும் போது தான் எங்களோட முதல் சந்திப்பு நிகழ்ந்தது ...

என்னவோ தெரியல இவள பார்த்த உடனே பிடிச்சிபோயிடுச்சு  ... அதனால அந்த மாங்காவா நான் அவளுக்கு விட்டு கொடுத்துட்டேன் .. அப்புறம் அவள நான் தொடர்ச்சியா சந்திப்பதற்கு வாய்ப்புகிடைக்கல ... ஏன்னா அவ வேற கூட்டம் நான் வேற கூட்டம் ...

திருமதி: ஹா ஹா ... இவர் பொய் சொல்லுகிறார் ... இவருக்கு  ஒரு நாள் என்ன பார்கலைன்னா கூட தூக்கமே வராது ... எந்த மரத்துலயாச்சும் உக்கார்ந்து

என்ன பார்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் மரத்துக்கு மரம் கிளைக்கு கிளை தாவி என் கவனத்த ஈர்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் எனக்கும் ஒரு மாதிரியா இவர் மேல காதல் வந்திடுச்சி ...

திருவாளர் : இவளுக்கு என் மேல காதல் வரதுக்குள்ள நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல ... அந்த தெருகோடி இனிப்பு புளியமரத்துல குத்தகை காரனுக்கு தெரியாம இனிப்பு புளியம்பழம் பறிச்சி கொடுத்து தான் இவளுக்கு நான் காதலனாவே ஆனேன் ...

திருமதி : ஹா ஹா ஹா ....

பார்த்தீங்களா .. இவங்களோட காதல் அனுபவம் எவ்ளோ மொக்கையா இருந்ததுன்னு ... வாங்க நேயர்களே .. இவங்க காதலித்த காலங்களில் எங்க எல்லாம் ஊரு சுத்தினாங்க எப்படி எல்லாம் நேரத்த செலவு பண்ணினாங்கன்னு அவங்களே சொல்றாங்க  ... வாங்க கேட்கலாம் ..


திருவாளர் : அப்போலாம் நாங்க ரெண்டு பேரும் சுத்தாத தோப்பு கிடையாது .. ஏறாத மரம் கிடையாது ... திருடி திங்காத காய் பழம் கிடையாது ... நாங்க சுத்த ஆரம்பிச்சதே ... இவளுக்கு சூரியன் பட்ட செம்மஞ்சள் நிற மாங்காய் பறிக்க தான் ... அந்த தெரு வாண்டுகள் கிட்ட போட்டி போட்டு நான் அந்த மாங்காய பறிச்சி இவளுக்கு கொடுப்பேன் ...திருமதி : எங்களோட பொழுதுபோக்கே நான் இவருக்கும் இவர் எனக்கும்மா பேன் பார்த்துகிட்டே பேசிகிட்டு இருக்குறது தான் .. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச போழுபோக்கும் அது தான் ...வெட்டி மொக்கைகளோட மொக்கை போலவே இவங்களோட பொழுதுபோக்கும் ரொம்பவே வித்த்யாசமானதாய் இருந்தது அல்லவா நேயர்களே ... 

இவங்களோட காதல் இவங்களோட பெற்றோர்களுக்கு எப்படி தெரிந்ததுன்னு சொல்ல போறாங்க .. கேட்கலாம் வாங்க ..

திருவாளர்: ரொம்ப நாள் வரைக்கும் எங்களோட காதல் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியாது ... நாங்க பழகினத கூட அவங்க ஆரம்ப கால கட்டத்துல இயல்பானதா தான் எடுத்துகிட்டாங்க ... போக போக தான் எங்க மேல சந்தேகம் வந்தது ... அப்புறம் ஒரு வழியா எங்க மேட்டர் எங்க கூட்டத்துக்கு தெரிஞ்சி ஆதரவும் எதிர்ப்பும் சமமா இருந்தது ...

திருமதி: நான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன் ... எப்படி எல்லாரையும் சமாளிச்சி இவர திருமணம் பண்ணிக்கபோரோமொன்னு ...

காதல் என்றாலே ... எதிர்ப்புகள சமாளிச்சி தான் ஆகனும் ... இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு இவங்களே சொல்லுறாங்க ... வாங்க இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு கேக்கலாம் ...

திருவாளர்: எங்க வீட்டு சைடு அவ்வளவா எதிர்ப்பு இல்ல ... அவங்க வீட்டுல தான் எல்லாரையும் சமாளிக்க வேண்டி இருந்தது ... எல்லாருக்கும் மாங்கா தேங்கா பறிச்சி கொடுத்து ஒவொருத்தரா சரி கட்டி எல்லார் கிட்டவும் எங்க கல்யாணத்துக்கு அனுமதி வாங்கினோம் ... இவளோட அப்பா மட்டும் ஐந்து இளநீர் , ஏழு மாங்காயா தின்னுட்டு தான் ஒத்துகிட்டார் ...


திருமதி: எங்களோட திருமணம் ஒருவழியா நிச்சயமாகிடுச்சி ... எங்க ரெண்டு பேர் கூட்டத்துலயும் சேர்த்து மொத்தம் ஒரு ஐம்பத்துஅஞ்சு பேர் தான் ... எல்லாரையும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போயி தான் எங்களோட திருமணத்துக்கு நேரடியா அழைச்சோம் ...

துன்பத்திலும் இன்பம் என்பது இதுதானோ ... வாங்க இவங்க திருமணம் எப்படி நடந்ததுன்னு கேட்கலாம் ...

திருமதி : எங்களோட திருமணம அந்த தோப்புலையே
இருக்குற பெரிய மரத்துல தான் நடந்தது ... எல்லா சொந்தபந்தம்னு எல்லாருமே வந்திருந்தாங்க ...திருவாளர் : எங்களோட ஹனி மூனுக்கு  நாங்க பக்கத்து தோப்புக்கு போனோம் ... அங்க கடலைக்காடு ... தென்னந்தோப்பு ... ன்னு நல்லா சுத்தினோம் ... அங்க ஒரு பெரிய குளம் இருந்தது .. அங்க டைவ் குளிச்சத எங்களால எப்பவுமே மறக்க முடியாது ...


இவங்க காதலிக்கும் போதும் சரி .. ஹனிமூன்லையும் சரி ரொம்ப நல்லாவே என்ஜாய் பண்ணி இருகாங்க ... இவங்கள பத்தி இவங்க பெற்றோர் என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம் வாங்க ...

திருவாளரின் பெற்றோர்: ஆரம்பத்துல இவங்க காதல்ல எங்களுக்கு உடன்பாடு இல்ல ... இவன் ரொம்பவே பிடிவாதமா இருந்ததால தான் நாங்க இந்த திருமணத்துக்கே சம்மதிச்சோம் ...நாங்கள தேடி இருந்தா கூட இப்டி ஒரு மருமக எங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டா ...

திருமதியின் பெற்றோர்: எங்க மாப்பிள்ளையோட அன்பு தான் நாங்க இந்த திருமணத்துக்கு சம்மதிக்க காரணம் ... ( மாபிள்ள ... அந்த இளநீர மறந்திடாதிங்க ... )

திருவாளர் ரொம்ப சாமர்த்தியமா எல்லாரையும் சமாளிச்சி தான் இந்த திருமணத்திற்கே எல்லாரையும் சம்மதிக்க வைத்திருக்கார் ... வாங்க இவரோட திருமண வாழ்க்கை பற்றி இவர் சொல்லுறத கேட்கலாம் ...

திருவாளர் : எங்களோட திருமண வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு ... இவர் தான் எங்க வீட்டு செல்லம் ... எங்க வாழ்க்கையின் அர்த்தமும் இவர் தான் எங்க செல்ல ஜுனியர் ...திருமதி : இப்போவே இவன் எவ்ளோ சுட்டி தெரியுமா ... கொஞ்ச நேரம் சும்மாவே இருக்க மாட்டான் ... அவ்ளோ துறுதுறு ... மரத்துக்கு மரம் தாவிகிட்டு ... எல்லார்கிட்டவும் வம்பிழுத்துகிட்டு ...

இவங்க அன்பின் அடையாளமாய் ஜுனியர் ... இவங்க இன்று போல் என்றும் இனிமையாய் அன்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் நேயர்களே ... மீண்டும் வேறொரு திருமண தம்பதிகளுடன் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது சிலந்தி  நாயகம் ......
வணக்கம் நேயர்களே :-D


நன்றி : remake