"ராஜ ராஜ சோழன் நான்" ...
என்னுடைய மொபைல் அழைத்தது ... காலையிலிருந்து இது நான்காவது தடவை ...என் கண்மணியின் சிரித்த முகத்துடன் கூடிய போட்டோ மொபைலில்...
"சொல்லுமா"
"என்னங்க அப்புறம் காய்கறி வாங்கணும்... மறக்காம சீககரம் வந்துடுங்க..."
வரேன்.. வரேன்."
"இல்ல... வரும்போது பாஸ் வேணும்... அதுக்குத்தான்..."
"ஓகே!ஓகே! அப்புறம் ஒரு கிலோ வெங்காயம் வேணும், வாஷிங் மெசின்
வேணும்,அப்புறம்!"
"கிண்டல் பண்ணா தீங்க ! பாஸ் மட்டும் போதும்"
வேலையில் மூழ்கி இருந்த என்னை நண்பர் கூப்பிடும் போதுதான் சாப்பாட்டுக்கு நேரம் ஆனது தெரிந்தது ... இப்போ தினமும் கண்மணி சமையல்... எந்தக் கடுப்பும் இல்லை..
"ராஜ ராஜ சோழன் நான் ...மொபைல் அழைத்தது
"ஹலோ ,கன்டீன்ல இருக்கேன் , சொல்லுமா .. சாப்பாடா? ...கரெக்டா இருக்கு மா !! ...சுட சுட சாப்பிட்டு இருந்தா சூப்பரா இருந்து இருக்கும் ..
சரி .. சீக்கரமே வரேன் ..அப்புறம் ..சொல்லு ...
என்ன deep silence... ஏதாவது பிரச்சனையா ... வீட்ல இருந்து ஏதாவது போன் ?....என்னனு சொன்னதானே ..தெரியும் ..."
ஒண்ணும் இல்லை ...
ஓகே ... அப்புறம் call பண்றன் ..."
இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் .. நாம் எந்த வேலை செய்வதா இருந்தாலும் ...அதை பத்தி மற்றவங்களோட கருத்து என்ன அப்படின்னு தெரிஞ்சிக்கிரதுல
ரொம்ப ஆர்வம் இருக்கும் ...
நான் அப்படி எல்லாம் இல்லை ...எவன் என்ன சொன்னா எனக்கு என்ன ..
எனக்கு புடிச்சிருக்கு நான் பண்றேன் ..
ரொம்ப ஆர்வம் இருக்கும் ...
நான் அப்படி எல்லாம் இல்லை ...எவன் என்ன சொன்னா எனக்கு என்ன ..
எனக்கு புடிச்சிருக்கு நான் பண்றேன் ..
அதனாலே சாப்பிடும்போதும் சரி ... சாப்பிட்ட பிறகும் சரி ...அது எப்படி இருந்தது ... என்ன நிறை என்ன குறைன்னு ஒரு detailed analysis report குடுக்கணும் என் கண்மணிக்கு ....
வீட்டு சாப்பாடு கமெண்ட்ஸ் அடிக்க முடியாது ..
"கமெண்ட்ஸ் அடிக்கலைன்னா பரவாயில்லை ...compliments குடுக்கலாம்ல ?" -இது கண்மணி ...
"நீயே சொல்லு ! ...'சாப்பிட்ட பின்னாடி .. கொழம்பு சூப்பர் ,ரசம் ரசிச்சிட்டே சாப்பிட்டேன் ..மோர் ..I want more...அந்த உறுகாய் பின்னிட்ட ...(ஒ ...அது கடைல வாங்கினதா ...) இருந்தாலும் அந்த combination நீதானே பண்ணே ..so first கிளாஸ்...இப்படி தினமும் சொன்னா..உனக்கே ஒரு நாள் போர் அடிச்சிடும் ..."
"பரவாயில்லை போர் அடிக்கிற வரைக்கும் சொல்லுங்க ..."
(நம்ம கருத்துக்கு என்னைக்கு மரியாதை இருந்தது ....)
"ஹே ! இன்னிக்கு ஒரே அசத்தல் சாப்பாடு போ !! ... அதுவும் அந்த பருப்பு பாயசம் ....கலக்கல் ...அப்புறம் அந்த வாழைப்பழ chips அருமை..ஓகே ஓகே :-) நல்லா இருந்தது ..ஸ்பெஷலா இருந்தது ...."
(எனக்காக பார்த்து பார்த்து சமையல் பண்ணி அது எப்படி இருந்ததுன்னு கேட்டு சந்தோஷப்படறது ஒரு தனி மகிழ்ச்சி என் கண்மணிக்கு)
...........................................................................................................................
டீ குடிக்கறப்போ வந்த நினைவுகள் ....சரி மிச்ச வேலை பாக்கலாம்னு போகும்போது ...
"ராஜ ராஜ சோழன் நான் " திரும்ப மொபைல் அழைத்தது...
"ஆமாம் ...கொஞ்சம் வேலை இன்னிக்கு ..கோவிலுக்கா ...திடீர்ன்னு என்ன ?
"சரி ...போலாம் ..ஒண்ணும் பிரச்சனை இல்லை ...நீ ஆபீஸ்ல இரு நான் வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன் ...ஓகே ...இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பறேன் ...
சண்டையே இல்லாம வாழ்க்கை நல்லா இருக்காது ..ஒரு த்ரில் இருக்காது ... அப்பப்போ இந்த சண்டைதான் தம்பதிக்குள்ள இருக்கிற அன்யோன்யத்தை அதிகரிக்கும் .(எவண்டா சொன்னது இந்த சுண்டைக்காய் தத்துவத்தை)
எனக்கு நினைவு தெரிஞ்சு எங்களுக்குள்ளே சண்டை வந்தது இல்லை..அதனால அன்யோன்யம் இல்லைனு
சொல்றதா ...ஏன் ? பிரச்சனையே இல்லாம வாழ்க்கை அப்பிடியே போகாதா ?
"ராஜ ராஜ சோழன் நான் " ...
"இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ... டிராபிக்மா .."
"ஹே ! என்ன இது புடவை ...பூ ..கலக்கற போ...
"இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ... டிராபிக்மா .."
"ஹே ! என்ன இது புடவை ...பூ ..கலக்கற போ...
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல ! ஒரு மாறுதலுக்குதான் ...."
"சரிமா ! எந்த கோயில் எல்லாம் முடிவு பண்ணியாச்சு இல்லையா ....கோயில்க்கு அப்புறம் ?"
"ஏங்க ?"
"சொல்லுமா ..."
"எங்கேயாவது ஹோட்டல்க்கு போலாமா ?"
"ஏன்மா ?..இன்னிக்கு டிபன் இல்லையா ? ஹய்யா ஜாலி.... புடவை கட்டினதுல டையர்டா இருக்கியா? "
"இல்ல ...சும்மாதான் ..
"ஏங்க ?"
"சொல்லுமா ..."
"எங்கேயாவது ஹோட்டல்க்கு போலாமா ?"
"ஏன்மா ?..இன்னிக்கு டிபன் இல்லையா ? ஹய்யா ஜாலி.... புடவை கட்டினதுல டையர்டா இருக்கியா? "
"இல்ல ...சும்மாதான் ..
"சரி "
"அதான் சரி சொல்லிட்டேன்ல ..அப்புறம் ஏன் முகத்தை ஒரு மாதிரி வைச்சி இருக்கே ? உடம்பு சரியில்லையா ?"
"ஒண்ணும் இல்ல போங்க "
..........................................................................................................
"ஹே ! சந்திரன் வண்டி ! வீட்டுக்கு வந்து இருக்கானா என்ன??
மச்சி happy wedding anniversary டா !!! (நண்பன்)
"தேங்க்ஸ் டா ! என்னடா Gift ரொம்பா கனமா இருக்கு ?
"ஓப்பன் பண்ணி பாருடா ! அப்புறம் என்ன ஸ்பெஷல் இன்னைக்கு ?" (நண்பன்)
"கோயில் ,வெளிய போய் lighta டிபன் , அப்புறம் இதோ வீட்டுக்கு , என் கையாலதான் சாப்பிடனும்னு என் கண்மணி சொல்லிட்டா !
"அப்படி நான் ஒன்னும் சொல்லவே இல்லையே...!!! (என் கண்மணி)
"Shhhh..."
வெயிட் பண்ணுங்க உங்களுக்கும் சேர்த்து டிபன் பண்ணிடறேன் !"(என் கண்மணி)
"இல்லைங்க ! கொஞ்சம் வேலை இருக்கு , நான் இன்னொரு நாள் வரேன் !" (நண்பன்)
"மச்சி ! தப்பிச்சிட்ட !!!"
"சும்மா இருங்க !!" (என் கண்மணி)
....................................................
"என்னம்மா ஒரு மாதிரி ஆகிட்டே ! I am sorry! அதான் சொல்றேன்ல ஆபீஸ் வொர்க்ல சுத்தம்மா மறந்துட்டேன் ...
நான் ஒரு மடையன் ! கோயில் , புடவை , பாயசம் , எதுவுமே தோணலை பாரு ! Sorry ! Sorry !"'
"எப்படிங்க ! இப்படி ஒரு முக்கியமான நாள் உங்களுக்கு மறந்து போகும் ! என்னமோ Gift தருவேன் , அது இது சொன்னிங்க , ஒரு ஈமெயில் கூட அனுப்பலே ! hmmmm...."
"Sorry சொல்லிட்டேன்ல ! ஆமா இன்னிக்கு full day ஆபீஸ்ல தானே இருந்தே நீ !
"ஆமா.. ஏன் ?"
"இல்ல சும்மாதான் கேட்டேன் !Sorry again! நாளைக்கு ஜாமாய்ச்சிடலாம் !"
"நீங்களே தனிய போய் ஜமாய்ங்க !"
.......................................................................................................................
"என்னடி ! நேத்து ஒரே மஜாவா ! என்ன வாங்கி தந்தார் உங்க வீட்டுகார் ?
.......................................................................................................................
"என்னடி ! நேத்து ஒரே மஜாவா ! என்ன வாங்கி தந்தார் உங்க வீட்டுகார் ?
"போடி ! அவர் வேலை விஷயத்துல wedding டே மறந்துட்டார் !!!
ரொம்ப கஷ்டமா போச்சு எனக்கு ...அப்புறம் நானே கோயில் ,அங்கே இங்க போகணும் சொல்லி கூட அவருக்கு ஞாபகம் வரலை ..."
அப்படியா? அவர் ஒன்னு விட்ட சித்தப்பாவுக்கு B'day cardஅனுப்புறவர்னு சொல்லி இருக்கே ...எப்படி உங்க wedding day மிஸ் பண்ணார் ??
அதாண்டி தெரியல !
"சரி ! ரொம்பா feel பண்ணாத ! எல்லாம் சரியாகிடும் "
"மேடம் ! உங்களுக்கு நேத்து ஒரு Courier வந்தது , நீங்க சீட்ல இல்லை , சொல்ல மறந்துட்டேன் , இந்தாங்க மேடம் "
.......................................................................................................................................
"டேய் படவா ! சத்தமே போடாம இவ்ளோ காஸ்ட்லியான ஒரு Diamond பென்டன Courier பண்ணிட்டு , ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல...
ஏன் நைட் திட்டு வாங்கினீங்க?? I am sorry ........100 வது தடவை sorry கேக்கிறேன்.....
"மேடம் ! உங்களுக்கு நேத்து ஒரு Courier வந்தது , நீங்க சீட்ல இல்லை , சொல்ல மறந்துட்டேன் , இந்தாங்க மேடம் "
.......................................................................................................................................
"டேய் படவா ! சத்தமே போடாம இவ்ளோ காஸ்ட்லியான ஒரு Diamond பென்டன Courier பண்ணிட்டு , ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல...
ஏன் நைட் திட்டு வாங்கினீங்க?? I am sorry ........100 வது தடவை sorry கேக்கிறேன்.....
அதான் பரவாயில்லைனு சொல்லிட்டேன்ல "
"எந்த தைரியத்துல நீங்க Courier பண்ணீங்க??
"எந்த தைரியத்துல நீங்க Courier பண்ணீங்க??
"Couriera? நான் நேர்ல வந்தில்லையா குடுத்தேன் !
அட பாவி ! இவ்ளோ பண்ணவன் , என் கையிலே குடுத்து இருக்கலாம் இல்ல !
"எல்லாம் ஒரு ஸர்ப்பரைஸா இருக்கட்டும்னு தான் ..."
"மண்ணாங்கட்டி ஸர்ப்பரைஸ் ...!!!! உங்கள .......
(அப்புறம் என்ன ...சொல்லவா வேண்டும் ???????????)
ராஜ ராஜ சோழன் நான் ...எனை ஆளும் காதல் தேசம் நீதான் "...