VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Friday, August 26, 2011

வாழத் தெரியாதவள்

என்னைப் பற்றிப் பேசினேன்,
சுயபுராணம் என்றனர்...

மற்றவர்களைப் பற்றிப் பேசினேன்,
பொறாமை என்றனர்...

சமூகத்தைப் பற்றிப் பேசினேன்,
பிழைக்கத் தெரியாதவள் என்றனர்...

சிரித்துப் பேசினேன், சூழ்ச்சிக்காரி என்றனர்..
சிரிக்காமல் பேசினேன், நயவஞ்சகி என்றனர்..

அமைதி காத்தேன், உம்மனாமூஞ்சி என்றனர்..
மௌனமானேன், 
வாழத் தெரியாதவள் என்றனர்....

Thursday, August 25, 2011

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?


அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள். திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும்  பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள். கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.