VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Sunday, January 29, 2012

"கால் சிலம்பை கழட்ட வேண்டியதில்லை."

நதி போல் விளையாட்டாய் வளைந்து நெளிந்து போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென வந்த ஒரு திருப்பத்தில் உணர்ந்தேன் வளைவும் நெளிவும் கடைசியாக முடிந்த வடிவம் கேள்விக்குறி என்பதை மட்டும்..
பட்டுப்புழுவின் மரணம் பட்டாம்பூச்சி போல..

வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி மாதிரி.கொஞ்ச காலம் தான் வாழ முடியும். அதே மாதிரி ஒரு  பட்டாம்பூச்சி சுதந்திரமா பறக்கும்வரை தான் தன் சந்தோஷ காற்றை சுவாசிக்கலாம் என்பதையும் தெரிஞ்சுகொள்ள  வேண்டும் .

சுய கௌரவம் ,அதிகாரம்,பதவி,பொய், போட்டி,பொறாமை இப்படி பல உயிரற்ற விஷயங்களுக்காக உயிருள்ள நம் சக மனிதர்களை பாடாய்படுத்துகிறோம். கொலை செய்றது மட்டும் தப்பு  இல்ல. நம்ம சுயநலத்திற்காக, நம்ம சந்தோசத்துக்காக இன்னொருத்தரை பற்றி  தப்பா சொல்றது தப்புதானே? சக ஊழியர்களை,சக நண்பர்களை,உறவினர்களை பற்றி  அவர்கள்  இல்லாதபோது தப்பா பேசுறதும் ,நம்பிக்கை துரோகம் பண்றதும் கூட கெட்டது தானே?

"கால் சிலம்பை  கழட்ட வேண்டியதில்லை எந்த நீதிக்காகவும்...."

கதை :
ஒரு சாதுவை சோதிக்க நினைத்த ஒரு மனிதன் பட்டாம்பூச்சியை கையில் வைத்து கொண்டு அவரிடம் ,என் கையில் என்ன உள்ளது என்று கேட்டான் .. அதற்கு அவர் சரியாக பட்டாம்பூச்சி என்று சொல்லிவிட்டார்.

உடனே  அவன் சாதுர்யமாக பட்டாம்பூச்சி எப்படி இருக்கிறது? என்று கேட்டான்.ஒரு வேளை அவர் உயிரோடு உள்ளது  என்று சொன்னால் அதனை  நசுக்கி இறந்து விட்டது என்று சொல்லலாம் என்றும்
இதுவே இறந்து விட்டது என்று சொன்னால் பறக்க விடலாம் என்றும் எண்ணினான் ..
அதற்கு அந்த சாதுவோ "அது உன் கையில் இருக்கிறது" என்று சொன்னார்
அது போல தான் நம் வாழ்க்கையும் .....அது பறப்பதும் இறப்பதும் நம் கையில் தான்  உள்ளது .

Thursday, January 12, 2012

சங்கடங்களை தீர்க்கும் "சங்கடஹர சதுர்த்தி"

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியதுமான சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தையும்   சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும்.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். கடன்தொல்லை, நோய், பகை உடையவர்கள் இந்த நோன்பை பூண்டு அவை நீங்கப் பெற்று இன்பம் எய்தி வருகின்றனர். 

விரதத்தின் பலன்கள்:

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன்  நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
 கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி  கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

கணேச காயத்ரீ

"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்"

விநாயகர் அகவல்   (எழுதியவர்: ஔவையார்)

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)                     

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்                                   
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே                                
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)           

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட                                   
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72) 

பலன் பெற்றவர்கள்: 

சந்திரன் இந்நோன்பைப் பூண்டு  சயரோகம் நீங்கப்பெற்றான்.
இவ்விரதத்தை பார்வதிதேவி கடைப்பிடித்து பரமனை அடைந்தார் எனவும், 

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது ஸ்ரீ கிருஷ்ணபகவானின் ஆலோசனைப்படி இவ்விரதத்தை கடைப்பிடித்து  போரில் தர்மத்தை நிலைநாட்டினர் என்பதும்,

சிவபெருமானும் இவ்விரதத்தை கடைப்பிடித்தே திரிபுரத்தினை எரித்தார் எனவும்,
இந்திரன் மூவுலகையும் ஆளும் வரம் பெற்றான் எனவும், ஆஞ்சநேயர்  இவ்விரதத்தை கடைப்பிடித்த பின்னரே இலங்கைக்கு சென்று சீதை இருக்குமிடத்தை அறிந்து வந்து இராமபிரானிடம் தெரிவித்துள்ளார் என்பதும் ஐதீகம்.
அத்தோடு   உண்மையே பேசிய அரிச்சந்திரனும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்தே அழியாப் புகழ் பெற்றான் என்பர்.

இவ்விரதத்தை முதன் முதலிற் செவ்வாய் அநுட்டித்து பேறுபெற்றான். அதனால் இதனை அங்காரக சதுர்த்தி எனவும் அழைப்பர்.



நன்றி: விக்கிப்பீடியா , வெப்துனியா.

Back to top Go down

Tuesday, January 10, 2012

"கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு"

கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை  என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள்  இடம்பெறும் விழா ஆகும். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன இன்றைய நாளில் அடங்கும்.

இந்த  கணுப்பண்டிகை  பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள் கொத்தினை கட்டுவார்கள் அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

"கணுப்பிடி " இந்த நாளின் சிறப்பு..அதென்ன கணுப்பிடி என்கிறீர்களா ?

ஆமாம்.. அது ஒருவகை விரதம் .
உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.
உடன்பிறந்த சகோதரர்கள் நலமுடனும் வளமுடனும்  வாழ சகோதரிகள் இன்றைய நாளில் பிரார்த்திப்பார்.

"கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு" என்பது பழமொழி.

அதாவது கார்த்திகை மாதம் எண்ணைதேய்த்துக் குளித்து விளக்குவைப்பதும், பொங்கலன்று  பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் அன்று  காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.

இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.

முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்.

ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.
தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.

உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அவர்களை  அழைத்து  சாதம் பாயசம் செய்து விருந்து போடலாம்.

அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதனாலோ என்னவோ  இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!

என் உடன் பிறந்த ஒருவரோடு  உடன்பிறக்காத அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் காணும்பொங்கல்  நாளில் நலம் வாழ வேண்டிக்கொள்கின்றேன்..!