VANAKKAM Silanthinaayagam WELCOMES u !!!

Monday, December 26, 2011

சனிப் பெயர்ச்சி பலன் 2011 - 2014

கர வருடம் , மார்கழி  மாதம் , 5ஆம் திகதி  புதன்கிழமை  (21.12.2011)   நாளில் சரியாக காலை 6:55 மணிக்கு கன்னி  ராசியில்  இருந்து  தன்னுடைய  உச்ச       வீ டான துலாம்  ராசிக்குள்  நுழையும்  சனி பகவான்  ஏறகுறைய  16.12.2014 வரை , துலாம்  ராசியிலேயே அமர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.

ரிஷபம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி திடீர் யோகங்களையும்  திடீர் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும்.

மிதுனம், கன்னி, துலாம், மகரம், மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு மத்திம பலன்கள் உண்டாகும். 

மேஷம், கடகம், விருச்சிகம், மற்றும் மீன
ராசிக்காரர்களுக்கு காரியத் தடைகள் , சிறு சிறு பாதிப்புகள் வந்து நீங்கும்.

சனிப்  பெயர்ச்சி பலன்களை பார்க்க பின்வரும் link ஐ click செய்யவும்..

http://www.tubetamil.com/view_video.php?viewkey=e7e254e5e76c8b7317ac&page=&viewtype=&category=


தொடரும்...



Friday, August 26, 2011

வாழத் தெரியாதவள்

என்னைப் பற்றிப் பேசினேன்,
சுயபுராணம் என்றனர்...

மற்றவர்களைப் பற்றிப் பேசினேன்,
பொறாமை என்றனர்...

சமூகத்தைப் பற்றிப் பேசினேன்,
பிழைக்கத் தெரியாதவள் என்றனர்...

சிரித்துப் பேசினேன், சூழ்ச்சிக்காரி என்றனர்..
சிரிக்காமல் பேசினேன், நயவஞ்சகி என்றனர்..

அமைதி காத்தேன், உம்மனாமூஞ்சி என்றனர்..
மௌனமானேன், 
வாழத் தெரியாதவள் என்றனர்....

Thursday, August 25, 2011

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?


அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள். திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும்  பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள். கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

Wednesday, February 02, 2011

நம்ம வீட்டு கல்யாணம்

  சிலந்தி  அகடமி வழங்கும் நம்ம வீட்டு கல்யாணம்

இன்னிக்கு நம்ம வீட்டு  கல்யாணம் நிகழ்ச்சில இரு மனங்கள் இணைந்து மகிழ்ந்த  திருமணம் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்  திருவாளர் திருமதி அவர்கள் ... வாங்க இவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்/



 திருவாளர் : எங்களோட கல்யாணம் ஒரு காதல் கல்யாணம் ... ஒரு திருட்டு மாங்கா பறிக்கும் போது தான் எங்களோட முதல் சந்திப்பு நிகழ்ந்தது ...

என்னவோ தெரியல இவள பார்த்த உடனே பிடிச்சிபோயிடுச்சு  ... அதனால அந்த மாங்காவா நான் அவளுக்கு விட்டு கொடுத்துட்டேன் .. அப்புறம் அவள நான் தொடர்ச்சியா சந்திப்பதற்கு வாய்ப்புகிடைக்கல ... ஏன்னா அவ வேற கூட்டம் நான் வேற கூட்டம் ...

திருமதி: ஹா ஹா ... இவர் பொய் சொல்லுகிறார் ... இவருக்கு  ஒரு நாள் என்ன பார்கலைன்னா கூட தூக்கமே வராது ... எந்த மரத்துலயாச்சும் உக்கார்ந்து

என்ன பார்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் மரத்துக்கு மரம் கிளைக்கு கிளை தாவி என் கவனத்த ஈர்த்துகிட்டே இருப்பார் ... அப்புறம் எனக்கும் ஒரு மாதிரியா இவர் மேல காதல் வந்திடுச்சி ...

திருவாளர் : இவளுக்கு என் மேல காதல் வரதுக்குள்ள நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல ... அந்த தெருகோடி இனிப்பு புளியமரத்துல குத்தகை காரனுக்கு தெரியாம இனிப்பு புளியம்பழம் பறிச்சி கொடுத்து தான் இவளுக்கு நான் காதலனாவே ஆனேன் ...

திருமதி : ஹா ஹா ஹா ....

பார்த்தீங்களா .. இவங்களோட காதல் அனுபவம் எவ்ளோ மொக்கையா இருந்ததுன்னு ... வாங்க நேயர்களே .. இவங்க காதலித்த காலங்களில் எங்க எல்லாம் ஊரு சுத்தினாங்க எப்படி எல்லாம் நேரத்த செலவு பண்ணினாங்கன்னு அவங்களே சொல்றாங்க  ... வாங்க கேட்கலாம் ..


திருவாளர் : அப்போலாம் நாங்க ரெண்டு பேரும் சுத்தாத தோப்பு கிடையாது .. ஏறாத மரம் கிடையாது ... திருடி திங்காத காய் பழம் கிடையாது ... நாங்க சுத்த ஆரம்பிச்சதே ... இவளுக்கு சூரியன் பட்ட செம்மஞ்சள் நிற மாங்காய் பறிக்க தான் ... அந்த தெரு வாண்டுகள் கிட்ட போட்டி போட்டு நான் அந்த மாங்காய பறிச்சி இவளுக்கு கொடுப்பேன் ...



திருமதி : எங்களோட பொழுதுபோக்கே நான் இவருக்கும் இவர் எனக்கும்மா பேன் பார்த்துகிட்டே பேசிகிட்டு இருக்குறது தான் .. எங்களுக்கு ரொம்ப பிடிச்ச போழுபோக்கும் அது தான் ...



வெட்டி மொக்கைகளோட மொக்கை போலவே இவங்களோட பொழுதுபோக்கும் ரொம்பவே வித்த்யாசமானதாய் இருந்தது அல்லவா நேயர்களே ... 

இவங்களோட காதல் இவங்களோட பெற்றோர்களுக்கு எப்படி தெரிந்ததுன்னு சொல்ல போறாங்க .. கேட்கலாம் வாங்க ..

திருவாளர்: ரொம்ப நாள் வரைக்கும் எங்களோட காதல் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியாது ... நாங்க பழகினத கூட அவங்க ஆரம்ப கால கட்டத்துல இயல்பானதா தான் எடுத்துகிட்டாங்க ... போக போக தான் எங்க மேல சந்தேகம் வந்தது ... அப்புறம் ஒரு வழியா எங்க மேட்டர் எங்க கூட்டத்துக்கு தெரிஞ்சி ஆதரவும் எதிர்ப்பும் சமமா இருந்தது ...

திருமதி: நான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன் ... எப்படி எல்லாரையும் சமாளிச்சி இவர திருமணம் பண்ணிக்கபோரோமொன்னு ...

காதல் என்றாலே ... எதிர்ப்புகள சமாளிச்சி தான் ஆகனும் ... இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு இவங்களே சொல்லுறாங்க ... வாங்க இவங்க எப்படி சமாளிச்சாங்கன்னு கேக்கலாம் ...

திருவாளர்: எங்க வீட்டு சைடு அவ்வளவா எதிர்ப்பு இல்ல ... அவங்க வீட்டுல தான் எல்லாரையும் சமாளிக்க வேண்டி இருந்தது ... எல்லாருக்கும் மாங்கா தேங்கா பறிச்சி கொடுத்து ஒவொருத்தரா சரி கட்டி எல்லார் கிட்டவும் எங்க கல்யாணத்துக்கு அனுமதி வாங்கினோம் ... இவளோட அப்பா மட்டும் ஐந்து இளநீர் , ஏழு மாங்காயா தின்னுட்டு தான் ஒத்துகிட்டார் ...


திருமதி: எங்களோட திருமணம் ஒருவழியா நிச்சயமாகிடுச்சி ... எங்க ரெண்டு பேர் கூட்டத்துலயும் சேர்த்து மொத்தம் ஒரு ஐம்பத்துஅஞ்சு பேர் தான் ... எல்லாரையும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போயி தான் எங்களோட திருமணத்துக்கு நேரடியா அழைச்சோம் ...

துன்பத்திலும் இன்பம் என்பது இதுதானோ ... வாங்க இவங்க திருமணம் எப்படி நடந்ததுன்னு கேட்கலாம் ...

திருமதி : எங்களோட திருமணம அந்த தோப்புலையே
இருக்குற பெரிய மரத்துல தான் நடந்தது ... எல்லா சொந்தபந்தம்னு எல்லாருமே வந்திருந்தாங்க ...



திருவாளர் : எங்களோட ஹனி மூனுக்கு  நாங்க பக்கத்து தோப்புக்கு போனோம் ... அங்க கடலைக்காடு ... தென்னந்தோப்பு ... ன்னு நல்லா சுத்தினோம் ... அங்க ஒரு பெரிய குளம் இருந்தது .. அங்க டைவ் குளிச்சத எங்களால எப்பவுமே மறக்க முடியாது ...


இவங்க காதலிக்கும் போதும் சரி .. ஹனிமூன்லையும் சரி ரொம்ப நல்லாவே என்ஜாய் பண்ணி இருகாங்க ... இவங்கள பத்தி இவங்க பெற்றோர் என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம் வாங்க ...

திருவாளரின் பெற்றோர்: ஆரம்பத்துல இவங்க காதல்ல எங்களுக்கு உடன்பாடு இல்ல ... இவன் ரொம்பவே பிடிவாதமா இருந்ததால தான் நாங்க இந்த திருமணத்துக்கே சம்மதிச்சோம் ...



நாங்கள தேடி இருந்தா கூட இப்டி ஒரு மருமக எங்களுக்கு கிடைச்சிருக்க மாட்டா ...

திருமதியின் பெற்றோர்: எங்க மாப்பிள்ளையோட அன்பு தான் நாங்க இந்த திருமணத்துக்கு சம்மதிக்க காரணம் ... ( மாபிள்ள ... அந்த இளநீர மறந்திடாதிங்க ... )

திருவாளர் ரொம்ப சாமர்த்தியமா எல்லாரையும் சமாளிச்சி தான் இந்த திருமணத்திற்கே எல்லாரையும் சம்மதிக்க வைத்திருக்கார் ... வாங்க இவரோட திருமண வாழ்க்கை பற்றி இவர் சொல்லுறத கேட்கலாம் ...

திருவாளர் : எங்களோட திருமண வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு ... இவர் தான் எங்க வீட்டு செல்லம் ... எங்க வாழ்க்கையின் அர்த்தமும் இவர் தான் எங்க செல்ல ஜுனியர் ...



திருமதி : இப்போவே இவன் எவ்ளோ சுட்டி தெரியுமா ... கொஞ்ச நேரம் சும்மாவே இருக்க மாட்டான் ... அவ்ளோ துறுதுறு ... மரத்துக்கு மரம் தாவிகிட்டு ... எல்லார்கிட்டவும் வம்பிழுத்துகிட்டு ...

இவங்க அன்பின் அடையாளமாய் ஜுனியர் ... இவங்க இன்று போல் என்றும் இனிமையாய் அன்புடன் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் நேயர்களே ... மீண்டும் வேறொரு திருமண தம்பதிகளுடன் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது சிலந்தி  நாயகம் ......
வணக்கம் நேயர்களே :-D


நன்றி : remake 

Sunday, October 31, 2010

"ராஜ ராஜ சோழன் நான்"

"ராஜ ராஜ சோழன் நான்" ...
என்னுடைய மொபைல் அழைத்தது ... காலையிலிருந்து இது நான்காவது தடவை ...என் கண்மணியின்  சிரித்த முகத்துடன் கூடிய போட்டோ மொபைலில்...


"சொல்லுமா"

"என்னங்க அப்புறம் காய்கறி வாங்கணும்... மறக்காம சீககரம் வந்துடுங்க..."

வரேன்.. வரேன்."

"இல்ல... வரும்போது பாஸ் வேணும்... அதுக்குத்தான்..."


"ஓகே!ஓகே! அப்புறம் ஒரு கிலோ வெங்காயம் வேணும், வாஷிங் மெசின்
வேணும்,அப்புறம்!" 


"கிண்டல் பண்ணா தீங்க ! பாஸ் மட்டும் போதும்"

வேலையில் மூழ்கி இருந்த என்னை நண்பர் கூப்பிடும் போதுதான் சாப்பாட்டுக்கு நேரம் ஆனது தெரிந்தது ... இப்போ தினமும் கண்மணி சமையல்... எந்தக் கடுப்பும்  இல்லை..


"ராஜ ராஜ சோழன் நான் ...மொபைல் அழைத்தது

"ஹலோ ,கன்டீன்ல இருக்கேன் , சொல்லுமா .. சாப்பாடா? ...கரெக்டா இருக்கு மா !! ...சுட சுட சாப்பிட்டு இருந்தா  சூப்பரா  இருந்து இருக்கும் ..
சரி .. சீக்கரமே வரேன் ..அப்புறம் ..சொல்லு ...

என்ன deep silence... ஏதாவது பிரச்சனையா ... வீட்ல இருந்து ஏதாவது போன் ?....என்னனு சொன்னதானே ..தெரியும் ..."


ஒண்ணும் இல்லை ...


ஓகே ... அப்புறம் call பண்றன் ..."

இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் .. நாம் எந்த வேலை செய்வதா இருந்தாலும் ...அதை பத்தி மற்றவங்களோட கருத்து என்ன அப்படின்னு தெரிஞ்சிக்கிரதுல
ரொம்ப ஆர்வம் இருக்கும் ...

நான் அப்படி எல்லாம் இல்லை ...எவன் என்ன சொன்னா  எனக்கு என்ன ..
எனக்கு புடிச்சிருக்கு நான் பண்றேன் ..

அதனாலே சாப்பிடும்போதும் சரி ... சாப்பிட்ட பிறகும் சரி ...அது எப்படி இருந்தது ... என்ன நிறை என்ன குறைன்னு ஒரு detailed analysis report குடுக்கணும்  என்  கண்மணிக்கு ....
வீட்டு சாப்பாடு கமெண்ட்ஸ் அடிக்க முடியாது ..

"கமெண்ட்ஸ் அடிக்கலைன்னா பரவாயில்லை ...compliments குடுக்கலாம்ல ?" -இது கண்மணி ...

"நீயே சொல்லு ! ...'சாப்பிட்ட பின்னாடி .. கொழம்பு சூப்பர் ,ரசம் ரசிச்சிட்டே சாப்பிட்டேன் ..மோர்  ..I want more...அந்த உறுகாய் பின்னிட்ட ...(ஒ ...அது கடைல வாங்கினதா ...) இருந்தாலும் அந்த combination  நீதானே  பண்ணே ..so first கிளாஸ்...இப்படி தினமும் சொன்னா..உனக்கே ஒரு நாள் போர் அடிச்சிடும் ..."

"பரவாயில்லை போர் அடிக்கிற வரைக்கும் சொல்லுங்க ..."
(நம்ம கருத்துக்கு என்னைக்கு மரியாதை இருந்தது ....)

"ஹே ! இன்னிக்கு ஒரே அசத்தல் சாப்பாடு போ !! ... அதுவும் அந்த பருப்பு பாயசம் ....கலக்கல் ...அப்புறம் அந்த வாழைப்பழ chips  அருமை..ஓகே ஓகே :-) நல்லா இருந்தது ..ஸ்பெஷலா இருந்தது ...."

 (எனக்காக பார்த்து பார்த்து சமையல் பண்ணி அது எப்படி இருந்ததுன்னு கேட்டு சந்தோஷப்படறது ஒரு தனி மகிழ்ச்சி என் கண்மணிக்கு)
...........................................................................................................................

டீ குடிக்கறப்போ வந்த நினைவுகள் ....சரி  மிச்ச வேலை பாக்கலாம்னு போகும்போது ...
 
"ராஜ ராஜ சோழன் நான் " திரும்ப மொபைல் அழைத்தது... 

"ஆமாம் ...கொஞ்சம் வேலை இன்னிக்கு ..கோவிலுக்கா ...திடீர்ன்னு என்ன ?
"சரி ...போலாம் ..ஒண்ணும் பிரச்சனை இல்லை ...நீ ஆபீஸ்ல இரு நான் வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன் ...ஓகே ...இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பறேன் ...

சண்டையே இல்லாம வாழ்க்கை நல்லா இருக்காது ..ஒரு த்ரில் இருக்காது ... அப்பப்போ இந்த சண்டைதான் தம்பதிக்குள்ள இருக்கிற அன்யோன்யத்தை அதிகரிக்கும் .(எவண்டா சொன்னது இந்த சுண்டைக்காய் தத்துவத்தை)


எனக்கு நினைவு தெரிஞ்சு எங்களுக்குள்ளே சண்டை வந்தது இல்லை..அதனால அன்யோன்யம் இல்லைனு

சொல்றதா ...ஏன் ? பிரச்சனையே இல்லாம வாழ்க்கை அப்பிடியே போகாதா ?
 
"ராஜ ராஜ சோழன் நான் " ...
"இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் ... டிராபிக்மா .."


"ஹே ! என்ன இது புடவை ...பூ ..கலக்கற போ...
 
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல ! ஒரு மாறுதலுக்குதான் ...."
 
"சரிமா ! எந்த கோயில் எல்லாம் முடிவு பண்ணியாச்சு இல்லையா ....கோயில்க்கு அப்புறம் ?"
"ஏங்க ?"
"சொல்லுமா ..."
"எங்கேயாவது ஹோட்டல்க்கு போலாமா ?"
"ஏன்மா ?..இன்னிக்கு டிபன் இல்லையா ? ஹய்யா ஜாலி.... புடவை கட்டினதுல டையர்டா இருக்கியா? "
"இல்ல ...சும்மாதான் ..
 
"சரி "
 
"அதான் சரி சொல்லிட்டேன்ல ..அப்புறம் ஏன் முகத்தை ஒரு மாதிரி வைச்சி இருக்கே ? உடம்பு சரியில்லையா ?"

"ஒண்ணும் இல்ல போங்க "
..........................................................................................................



"ஹே ! சந்திரன் வண்டி ! வீட்டுக்கு வந்து இருக்கானா என்ன??  

மச்சி happy  wedding  anniversary  டா !!! (நண்பன்)

"தேங்க்ஸ் டா  ! என்னடா Gift ரொம்பா கனமா இருக்கு ?

"ஓப்பன் பண்ணி பாருடா ! அப்புறம் என்ன ஸ்பெஷல் இன்னைக்கு ?" (நண்பன்)

"கோயில் ,வெளிய போய் lighta டிபன் , அப்புறம் இதோ வீட்டுக்கு , என் கையாலதான்  சாப்பிடனும்னு என் கண்மணி சொல்லிட்டா !

"அப்படி  நான் ஒன்னும் சொல்லவே இல்லையே...!!! (என் கண்மணி)
"Shhhh..."
வெயிட் பண்ணுங்க உங்களுக்கும் சேர்த்து டிபன் பண்ணிடறேன் !"(என்  கண்மணி)
 
"இல்லைங்க ! கொஞ்சம் வேலை இருக்கு , நான் இன்னொரு நாள் வரேன் !" (நண்பன்)
 
"மச்சி ! தப்பிச்சிட்ட !!!"

"சும்மா இருங்க !!"  (என் கண்மணி)
....................................................
"என்னம்மா ஒரு மாதிரி ஆகிட்டே ! I am sorry! அதான் சொல்றேன்ல ஆபீஸ் வொர்க்ல சுத்தம்மா மறந்துட்டேன் ...
நான் ஒரு மடையன் ! கோயில் , புடவை , பாயசம் , எதுவுமே தோணலை பாரு ! Sorry ! Sorry !"'

"எப்படிங்க ! இப்படி ஒரு முக்கியமான நாள் உங்களுக்கு மறந்து போகும் ! என்னமோ Gift தருவேன் , அது இது சொன்னிங்க , ஒரு ஈமெயில் கூட அனுப்பலே ! hmmmm...."

"Sorry சொல்லிட்டேன்ல ! ஆமா இன்னிக்கு full day ஆபீஸ்ல தானே இருந்தே நீ !

"ஆமா.. ஏன் ?"

"இல்ல சும்மாதான் கேட்டேன் !Sorry again! நாளைக்கு ஜாமாய்ச்சிடலாம் !"
 
"நீங்களே தனிய போய் ஜமாய்ங்க !"
.......................................................................................................................




"என்னடி ! நேத்து ஒரே மஜாவா ! என்ன வாங்கி தந்தார் உங்க வீட்டுகார் ?

"போடி ! அவர் வேலை விஷயத்துல wedding டே  மறந்துட்டார் !!!

ரொம்ப கஷ்டமா போச்சு எனக்கு ...அப்புறம் நானே கோயில் ,அங்கே இங்க போகணும் சொல்லி கூட அவருக்கு ஞாபகம் வரலை ..."

அப்படியா? அவர் ஒன்னு விட்ட சித்தப்பாவுக்கு B'day  cardஅனுப்புறவர்னு சொல்லி இருக்கே ...எப்படி உங்க wedding day மிஸ் பண்ணார் ??
 
அதாண்டி தெரியல ! 

"சரி ! ரொம்பா feel பண்ணாத ! எல்லாம் சரியாகிடும் "

"மேடம் ! உங்களுக்கு நேத்து ஒரு Courier வந்தது , நீங்க சீட்ல இல்லை , சொல்ல மறந்துட்டேன் , இந்தாங்க மேடம் "
.......................................................................................................................................



"டேய் படவா ! சத்தமே போடாம இவ்ளோ காஸ்ட்லியான ஒரு Diamond பென்டன Courier பண்ணிட்டு , ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல...

ஏன் நைட்  திட்டு வாங்கினீங்க?? I am sorry ........100 வது தடவை sorry கேக்கிறேன்..... 

அதான் பரவாயில்லைனு சொல்லிட்டேன்ல "

"எந்த தைரியத்துல நீங்க  Courier பண்ணீங்க??
 
"Couriera? நான் நேர்ல வந்தில்லையா  குடுத்தேன் !

அட பாவி ! இவ்ளோ பண்ணவன் , என் கையிலே குடுத்து இருக்கலாம் இல்ல !
 
"எல்லாம் ஒரு ஸர்ப்பரைஸா இருக்கட்டும்னு தான் ..."

"மண்ணாங்கட்டி ஸர்ப்பரைஸ் ...!!!! உங்கள .......

(அப்புறம்  என்ன ...சொல்லவா வேண்டும் ???????????)
ராஜ ராஜ சோழன் நான் ...எனை ஆளும் காதல் தேசம் நீதான் "...

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே!
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே!
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ் மைந்தன் தோன்றினானே!

கோரஸ் : புகழ் மைந்தன் தோன்றினானே!

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே!
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

-அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..

மின்சாரக் கனவு
கவியரசு வைரமுத்து
அனுராதா ஸ்ரீராம்
ஏ.ஆர். ரகுமான்

உயிரும் நீயே உடலும் நீயே

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே (2)
தன உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து

உறவும் நீயே தாயே (2)
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்

கடலும் உருகும் தாயே (2)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே!!! (உயிரும்)

பெண்ணை படைதான் மண்ணை படைதான்
காற்றும் மழையும் ஒளியும் படைதான் (2)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயை படைதான் (உயிரும்)
 
 
படம்           :  பவித்ரா (1994)
இயற்றியவர்  : கவிஞர் வைரமுத்து
இசை          : எ.ர.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன்

 

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்
தீராமல் இங்கே வாழுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

நாமெல்லாம் சுவாசிக்க
தனி தனி காத்து கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பிவரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு


படம்       : மாயாவி(2005)
இயற்றியவர் : பழனி பாரதி
பாடியவர்கள்: எஸ்பிபி, சரண், கல்பனா
இசை      : தேவி ஸ்ரீ பிரசாத்

ஊமை விழிகள்

தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து – தாயின்
கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? – உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் – இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

ஊமை விழிகள்(1986)
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்

Tuesday, October 26, 2010

கேதார கௌரி விரதம்




மாங்கல்ய பாக்யமும், மகிழ்ச்சியும் தரும் கேதார கௌரி விரதம் 






ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதம் இவ்வருடம் 16.10.2010 சனிக்கிழமை ஆரம்பமாகி 05.11.2010 வெள்ளிக்கிழமை வரை அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன.
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும்,மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். 

மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட  நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு  ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.

சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.
 
"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.

தென்நாட்டுச் சைவம் எனப்போற்றப்படும் சைவ சித்தாந்தம் கூறும் பரம்பொருள் சிவனாகும். சிவனின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் பல இருந்த போதிலும் கேதார கௌரி விரதம் பலவகையிலும் சிறப்புடைய விரதமாகக் கொள்ளப்படுகின்றது. 

பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும்புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
 
இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும் இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும். 

ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயது வேறுபாடோ இன்றி, வாழ்க்கையின் எந் நிலையில் இருப்போரும் இவ் நோன்பினை தமக்கு வேண்டிய வரங்களை வேண்டி அனுஷ்டித்து இக, பர இன்பத்தினைப் பெற்று இன்புற்று வாழ வழி செய்கின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற "கேதார கௌரி விரதம்' பற்றி ஓர் புராண வரலாறு உண்டு.


விரதபலன்

 தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்   
   

குழைத்த வெண்திசைப் புனல்படிந்து அரனடிகுறுகா
    

 இழைத்த தந்துவி னேழு மூனறிடக்கரந் தரித்துக்
    

 குழைத்த வெண்கதிர் பரிதிபோய்க் குரைககடற் குளிப்ப
    

 இழைத்த சிந்தையி னோர்பொழு தயின்றுற வேண்டும்”.